

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.
தமிழகத்தில் புதிய அரசை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான விவாதக் களமாக மாறியுள்ளது. சட்டமன்ற அவையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய விவரங்கள்:-
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தாலும் கடந்த கால நிர்வாக குளறுபடி, மின்மாற்றிகளில் பழுது, வேண்டுமென்றே செய்யும் நடவடிக்கையாலும் மின்தடை ஏற்பட்டது.
தமிழக விவசாயிகள் முழுமையாக தவெக அரசை புரிந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் நமது ஆட்சியை ஏற்றாலும் எதிர்க்கட்சியினர் சித்து வேலையால் போராட்டம் நடத்துகின்றனர்.
எல் நினோவின் காரணமாக இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே இருக்கும். எல்நினோ வெப்ப அலையால் மழை குறைவு என்பதை விவசாயிகள் நன்று அறிவர்.
விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த தவேக அரசு செய்யும்.
இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் நிதி நெருக்கடியை விட்டுபோய் இருந்தாலும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மக்கள் நலனுக்காக தவெக அரசு சின்சியராகவும், முழு வீச்சிலும் தொடர்ந்து உழைக்கும் என உறுதியளித்தார்.