
evils evils என்று Devils பேசக்கூடாது என கூறி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சைகையை சபாநாயகரிடம் அனுமதி பெற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து காட்டினார்.
தேசிய கீதம் விவகாரத்தில் மரபை மாற்றியதாக போர் போல மாற்றினர். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் என்ன ஆனது, ஆனால் பேசு பேசு என்கின்றனர். கலைஞர் புகைப்பட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்து என கூறியுது நினைவுள்ளதா? சபையில் நடந்த கலைஞர் பட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பின்னர் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை நான் கேட்டால் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்வு என கூறுவர். தமிழ் தமிழ் என கூறி கொண்டு திமுக போல் இரட்டை வேடம் போடமாட்டோம்- முதலமைச்சர் விஜய்
எங்களுக்கும் நக்கல் நையாண்டியுடன சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசத் தெரியும்- முதலமைச்சர் விஜய்
நம்மை தேர்ந்தெடுத்ததற்காக நம் மீது மட்டுமல்ல மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள்- முதலமைச்சர் விஜய்
தவெக அரசில் 4 பெண்கள் அமைச்சர்கள், 8 பட்டியலினத்தவருக்கு அமைச்சர் பதவி தந்துள்ளோம்- முதலமைச்சர் விஜய்
பெண்களின் பாதுகாப்பு நாங்கள் என கூறும் உங்கள் அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி தந்தீர்கள்?- முதலமைச்சர் கேள்வி
அம்பேத்கரின் 100 ஆண்டு கால கனவு தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நடந்துள்ளது- முதலமைச்சர் விஜய்
ஊழலில் ஊறி போனவர்களால் ஆட்சியில் பங்கு என்பது அளிக்க முடியாது. சோபா மாடல் ஆட்சி என்ன என்பதை புரிந்து கொள்ளவே இரண்டு நாட்கள் ஆனது- முதலமைச்சர் விஜய்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நமக்கு ஆதரவு தந்தது சுயேட்சையாக எடுத்த முடிவு என சொல்கின்றனர்- முதலமைச்சர் விஜய்
அரசு பணத்தை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம் ஏற்கனவே தொட்டவர்களையும் விடமாட்டோம்- முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜயின் பேச்சை கண்டித்து சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு
நீங்கள் அனுப்பி வைத்தவர்கள் என்றால் அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்- முதலமைச்சர் விஜய்
மக்கள் தயவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளால் தான் ஆட்சி நடக்கிறது -முதலமைச்சர் விஜய்
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டால் விட மாட்டோம்- முதலமைச்சர் விஜய் ஆவேசம்
கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தற்போது கஜானாவிற்கு சென்று சேர்த்துக்கொண்டிருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் ஆதாரத்தோடு பேச வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக ஆட்சியின் வழிமுறையை திமுகவினர் பின்பற்ற வேண்டும் என அவை முன்னவர் செங்கோட்டையன் வேண்டுகோள்
தவெகவினரை நோக்கி திமுகவினர் ஒருமையில் அழைப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
முதலமைச்சர் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி தருகிறேன்- சபாநாயகர்
சபாநாயகர் சமாதானப்படுத்த முயன்றும் கேட்காமல் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக்கில் பார்ட்டி பண்ட் என முதலமைச்சர் விஜய் பேசியதை அடுத்து தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மன்னராட்சி அல்ல மனசாட்சி உள்ள மக்களாட்சி, விமர்சனம் செய்ய எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு- முதலமைச்சர் விஜய்
சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பெண்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் கடந்த மே மாதம் தான் உருவானது போல் பேசுகிறார்கள். தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக சட்டம் ஒழுங்கு டிஜிபி இல்லாமல் இருந்தது. சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவது அக்கறை அல்ல அவதூறு அரசியலாகவே தெரிகிறது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக யாருக்கு என்ன ஆலோசனைகள் இருந்தாலும் கூறலாம். ஊழலில் இருந்து தப்பிப்பது தான் நிர்வாக திறன் என்றால் அதனை த.வெ.க. அரசு செய்யாது- முதலமைச்சர் விஜய்
தமிழக வெற்றிக்கழகம் யாருடைய டீமும் அல்ல, மக்களுடைய டீம்- முதலமைச்சர் விஜய்
தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்துள்ளோம். எக்காரணத்தை கொண்டும் மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். நீட் தேர்வு கூடாது என மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கண்ணை மூடி கொண்டு மத்திய அரசை எதிர்ப்பது தவெகவின் கொள்கை அல்ல. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்- முதலமைச்சர் விஜய்
கடந்த கால நிர்வாக குளறுபடி, மின்மாற்றிகளில் பழுது, வேண்டுமென்றே செய்யும் நடவடிக்கையாலும் மின்தடை. தமிழக விவசாயிகள் முழுமையாக தவெக அரசை புரிந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் நமது ஆட்சியை ஏற்றாலும் எதிர்க்கட்சியினர் சித்து வேலையால் போராட்டம் நடத்துகின்றனர். எல்நினோ வெப்ப அலையால் மழை குறைவு என்பதை விவசாயிகள் நன்று அறிவர்- முதலமைச்சர் விஜய்
நம் வீட்டு பெண்களை மதிக்க தெரிந்த எங்களுக்கு ஓசி பஸ், ரூ.1000 கேஸ் என பேச தெரியாது. எதிர்க்கட்சி என்பதால் எங்கள் ஆட்சியின் மீது 1000 பழி போடலாம், மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை உள்ளது- முதலமைச்சர் விஜய்
நிர்வாக குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின் தடையை கண்காணிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் சில இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது- முதலமைச்சர் விஜய்
தவெக எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது. பதவி உயர்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் பணம் வாங்க தெரியாது. கோவில் பணத்தை கொள்ளையடிக்க தவெக எம்எல்ஏக்களுக்கு தெரியாது. அரசு பணத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு தவெகவிற்கு மாற்ற தெரியாது. தங்கத்தை உருக்கி விற்க தெரியாது- முதலமைச்சர் விஜய்
ஊழலில்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்போம்- முதலமைச்சர் விஜய்
த.வெ.க. ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் விஜய் உரையாற்றி வருகிறார்.
* சிங்கப்பெண் சிறப்பு படை, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு...
* மின்துறையில் மாற்றங்கள் செயல்படுகிறது, பல குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
* மத்திய அரசு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்ஜீவன் நிதியை கேட்டு பெற்றுள்ளோம்.
அண்ணாவின் சாமானியர் ஆட்சி போல் விஜய் ஆட்சியில் மிக மிக சாமானியர்கள் ஆட்சியில் உள்ளனர். இளைஞர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டோருக்கு பதிலாக தான் நமது ஆட்சி. 2026 தேர்தலில் யாராலும் உடைக்க முடியாது சொன்ன சாதி, மதத்தை உடைத்துள்ளோம். ஊழலின் ஊற்றுக்கண் ஒழிக்கப்பட்டு விட்டதாக தினத்தந்தி நாளிதழ் கட்டுரை எழுதியுள்ளது- முதலமைச்சர் விஜய்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என சொல்வது தான் நமது ஆட்சி. காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம். நேர்மையான நிர்வாகம் என்பதில் த.வெ.க. நிர்வாகம் உறுதியாக உள்ளது- முதலமைச்சர் விஜய்
மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். கட்சி ஆரம்பித்தபின் வீட்டிற்குள் செல்வோர் மத்தியில், நம் மக்கள் வீட்டிற்குள் சென்ற பின் தான் கட்சி ஆரம்பித்தோம். 2 பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளில் நமக்கு உடன்பாடு இல்லை. நமது கட்சியை நடிகன் கட்சி என கூறி நக்கல், நையாண்டி செய்கிறார்கள். தவெகவின் மக்கள் சந்திப்பிற்கு அவ்வளவு தடைகள் விதிக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளோம். கரூர் உயிரிழப்பு கொடூர சம்பவம் எப்போதும் நெஞ்சத்தை விட்டு அகலாது. தமிழகத்தில் தற்போது மிகமிக சாமான்யர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது- முதலமைச்சர் விஜய் பேச்சு
இலங்கை தமிழர் நலனுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்துள்ளோம். விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல வழிகளில் மக்களுக்கு உதவியாக இருந்துள்ளோம். தனது திரைப்படங்கள் மூலமாக சமூகநீதியை பேசியதாக முதலமைச்சர் விஜய் பேச்சு.
என் உழைப்பு உயர்வுக்கு தமிழக மக்கள் தான் பின்னால் உள்ளனர். மக்கள் பணி செய்வது தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை. சினிமா கேரியரில் நான் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் காரணம். 1990-களில் ரசிகர்க மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு நன்மை செய்தோம்- முதலமைச்சர் விஜய்
கட்சிகள் கொள்கைகளால் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியாற்றவே வந்துள்ளோம். எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என நினைத்து பேசினார் உதயநிதி ஸ்டாலின். நான் சூட்டிங்கில் இருந்து நேரடியாக வந்து CM ஆனதாக சிலர் கூறுவது ரீல் ரியல் அல்ல- முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு சட்டசபையில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்- முதலமைச்சர்
தமிழக மக்கள் என் நெஞ்சில் குடியிருக்கின்றனர். தவெக அரசை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி- முதலமைச்சர் விஜய்
என் நெஞ்சில் குடியிருக்கும்... ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் உரை தொடக்கம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் திருத்தங்களை அவை ஏற்கும் நிகழ்வு நடைபெறுகிறது
முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் சின்னசாமி, காளிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்- சட்டசபை கூடியது
தமிழக சட்டசபை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை
அதிமுக சட்டசபை குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு வருகை