TN CM Vijay | டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு?

எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
TN CM Vijay | டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு?
Published on

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் நேற்று (மே 10) பொறுப்பேற்றார்.

இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று (மே 11) கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் இன்று தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களை நேரில் சந்தித்தார்.

மேலும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் விஜய் நாளை (மே 12) சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக டாஸ்மாக் மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com