TN Assembly Election | 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியா? - திருமாவளவன் விளக்கம்

மாநிலங்களவை சீட் குறித்து பேசினோம். பரிசீலிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள் என்று திருமாவளவன் கூறினார்.
TN Assembly Election | 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியா? - திருமாவளவன் விளக்கம்
Published on

மாநிலங்களவை சீட் குறித்து பேசினோம். பரிசீலிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள் என்று திருமாவளவன் கூறினார்.

வரும் சட்டசபை தேர்தலில் 6 தனித்தொகுதிகளிலும் 2 பொதுத்தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது என நேற்றைய விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* விசிகவிற்கு இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

* 23 கட்சிகள் உள்ள மெகா கூட்டணி என்பதால் கூட்டணி கட்சிகளின் நலனை கருத்தில்கொண்டு 8 தொகுதிகளுக்கு விசிக உடன்பட்டது.

* விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ கூட்டணி கட்சிகளின் நலமும் முக்கியம்.

* திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதற்கு முதன்மையான காரணம் ஜனநாயக அரசியல் பாதுகாப்பு தான்.

* திராவிட அரசியலுக்கு களமாடுகிறோம் என்ற பெயரில் சமூக நீதி அரசியலுக்கே வேட்டு வைக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.

* மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்றுவது மக்களுக்கு நல்லதல்ல, அதற்காக எதிர்த்து போராடுகிறோம்.

* இடதுசாரி அரசியலை பாதுகாப்பதற்காக எங்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் 18 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பணிபுரிவோம்.

* பிற்போக்கு அரசியல் தமிழ்நாட்டிற்கு வந்துவிடக் கூடாது.

* மாநிலங்களவை சீட் குறித்து பேசினோம். பரிசீலிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

* 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com