

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ஜக.வின் ஏ டீம் தி.மு.க. தான். தமிழகத்தில் பா.ஜ.க.வை வேரூன்ற விட்டது யார்?
* கல்வி மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
* கல்விக்கு கடன் கொடுக்கிறேன் என கூற வட்டிக்கடையா வைத்திருக்கிறார்கள்.
* சொந்த நாட்டு மக்களுக்கு கடனை வைத்துவிட்டு செல்பவர்கள் நல்ல தலைவரா?
* 6 லட்சம் பேர் தாலியை அறுத்துவிட்டு குடும்பத்திற்கு 2000 தருவேன் என்பது எப்படி?
இவ்வாறு அவர் கூறினார்.