குதிரை பேரம் விவகாரம்: கவர்னருக்கு அதிகாரம் இருந்தால் உடனடியாக தலையிட வேண்டும்!- திருமாவளவன்

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து முறியடித்தோம்.
திருமாவளவன்
Published on

தமிழ்நாட்டு அரசியலில் புயலை கிளம்பியுள்ள குதிரை பேரம் விவகாரத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருந்தால் உடனடியாக தலையிட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

பொருத்தமில்லை

Q

அ.தி.மு.க.வில் 90 சதவீத நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைய உள்ளதாக ஆதவ் அர்ஜூனா கூறினார். அதற்கு ஏற்றாற்போல் நிர்வாகிகளும் த.வெ.கவில் இணைகின்றனர். இது அ.தி.மு.க. வை டார்கெட் செய்து பணியாற்றுவதை நீங்கள் எப்படி பார்க்குறீர்கள்?

A

இதுகுறித்து இதுவரை எடப்பாடி பழனிசாமி எதுவுமே கருத்து சொல்லவில்லை. ஊடகவியலாளர்களும், அதிமுக பொதுச்செயலாளர் கிட்ட கேட்க வேண்டிய கேள்விகளை எங்களைப் போன்றவர்களிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அதே போல் அதிமுக-வை முழுவதுமாக த.வெ.க.வில் இணைப்போம் என்று த.வெ.க. தரப்பில் சொல்லப்படுகிறது என்றால் அவர்களையும் நீங்கள் இது சரியா? ஜனநாயகமா? அரசியல் அறமா? என்று கேட்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாமல் த.வெ.கவும் இல்லாத, அதிமுகவும் அல்லாத எங்களை போன்றவர்கள் இடம் நீங்கள் எழுப்புகிற கேள்வி பொருத்தமில்லாதது போல் இருக்கிறது.

குதிரை பேரம் என்று மூன்று கட்சிகளும் என்று நிருபர்கள் கேட்டவுடன் இது எல்லாத்துக்கும் அவங்க இரண்டு பேருதான் பதில் சொல்லணும் என்றார்.

உடனடியாக தலையிட வேண்டும்

Q

குதிரை பேரம் தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கவர்னரிடம் புகார் அளித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசு மீதும் விமர்சனம் எழுகிறது?

A

அது உண்மையாக இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னருக்கு அதில் அதிகாரம் இருந்தால் உடனடியாக தலையிட வேண்டும்.

Q

பாராளுமன்ற கூட்டத் தொடரில் என்னென்ன முக்கிய அம்சங்கள் கொண்டு வரப்படுகிறது?

A

குறிப்பாக இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் one nation one election என்கிற நிலையை அதற்கான சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாக தெரிகிறது. ஏற்கனவே திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து முறியடித்தோம். இப்போதும் அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம். ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரை அக்கட்சியில் இருந்து வெளியேற்றி அரசியல் சூதாட்டம் ஆடுகிற நிலையே நாம் பார்க்கிறோம். பாராளுமன்றத்திற்கு சென்றால் தான் இதுகுறித்து என்ன நிலை என்பது தெரிய வரும். இருந்தாலும் நாங்கள் இந்த முறை அந்த முயற்சியை முறியடிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com