

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இன்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை 2-வது முறையாக சந்தித்து ஆட்சிஅமைக்க அழைப்பு விடுக்குமாறு த.வெ.க. தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், 118 எம்எல்ஏக்கள் ஆதரவை காண்பித்து பதவியேற்புக்கு வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் திருமாவளவன் கூறுகையில், தனிப்பெரும் கட்சியாக த.வெ.க.வை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும்.
ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல. த.வெ.க. தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். எங்களுடன் இணைந்து த.வெ.க. ஆட்சியமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலிக்கிறோம் என்றார்.