

சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக கூட்டணியை உடைக்க பல தரப்பினர் முயன்றனர்.
* கடந்த 2 ஆண்டுகளாக என்னை குறி வைத்து காய்களை நகர்த்தினார்கள்.
* திமுக கூட்டணியை பலவீனப்படுத்த இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டினேன்.
* திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முடிந்த வரை நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
* என்னை குறிவைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பினர். சாதிய, மதவாத சக்திகள் என்னை குறிவைத்து காய் நகர்த்தினர்.
* தற்போதும் சமூக வலைதளங்களில் என்னை மட்டுமே குறி வைப்பது ஏன் என புரியவில்லை.
* திமுக கூட்டணி வெற்றி பெற என்ன செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளையும் செய்தேன்.
* தேர்தல் முடிவுக்குப்பின் திமுக கூட்டணியை காப்பாற்றும் வலிமை என்னிடம் இல்லை.
* காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகள் எடுத்த முடிவுகளில் நான் நுழைய முடியாது.
* எங்களின் நேர்மை, தூய்மையை களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
* தேர்தல் அரசியல் வேண்டாம் என 10 ஆண்டுகளாக இருந்த இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
* தவெக-க்கு ஆதரவு அளிப்பது குறித்த முடிவை எடுக்க நான் எடுத்த காலத்தை குறிப்பிட்டு பலரும் அவதூறு விமர்சனங்களை முன் வைத்தனர்.
* தவெகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை மிகமிக நிதானமாகத்தான் எடுத்தேன்.
* உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அப்போது முடிவெடுப்போம்.
* தவெகவுடனான கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.