என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி: திருமாவளவன் கடும் தாக்கு
    X

    சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி: திருமாவளவன் கடும் தாக்கு

    • பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.
    • பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது என்றார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள்.

    பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.

    பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள்.

    பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர்.

    அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது பிரபாகரனை ஆதரித்ததுண்டா?

    விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை ஆதரிப்பது ஏன்?

    பா.ஜ.கவின் கொள்கை பரப்பு அணி போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார்.

    இது வெறும் திராவிட எதிர்ப்பு அரசியல் அல்ல, நமது கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் என தெரிவித்தார்.

    Next Story
    ×