என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணனையும், தம்பியையும் பொறுத்த அளவில் பெரிய பிரச்சனையில்லை - மாணிக்கம் தாகூர்
    X

    'அண்ணனையும், தம்பியையும் பொறுத்த அளவில் பெரிய பிரச்சனையில்லை' - மாணிக்கம் தாகூர்

    • காங்கிரஸை பலமாக்குவதுதான் எங்களின் வேலை
    • முதலமைச்சர் கூறியதுபோல தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம்

    நீண்ட நாட்களாகவே தமிழ்நாட்டின் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவை கடுமையாக சாடிவருகின்றனர். அதில் ஒருவர் மாணிக்கம் தாகூர். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பு நிலவிவந்தது.

    நேற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூர் மீது தொடர்ந்து எழுந்துவரும் புகார்கள் தொடர்பாக பேச இன்று பெங்களூரு செல்வதாக மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,

    "மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது டிஎன்டி (பிரமலைக்கள்ளர், நரிக்குறவர் உள்ளிட்ட சமூகங்கள் ) சமூகத்தினருக்கு தனியாக ஒரு பத்தியை சேர்க்கவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரியும். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி கட்சியின் தலைமையிடம் பேசிவிட்டுதான் வந்தேன்" என தெரிவித்தார்.


    செய்தியாளர் சந்திப்பின்போது

    தொடர்ந்து கார்கே, ராகுல் காந்தியைவிட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? என செல்வப்பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, அதெல்லாம் அண்ணனையும், தம்பியையும் பொறுத்த அளவில் பெரிய பிரச்சனையில்லை. நாங்கள் எல்லாம் சகோதரர்கள். காங்கிரஸை பலமாக்குவதுதான் எங்களின் வேலை." என தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் வளர்ச்சிக்காக இருக்க போகிறதா அல்லது வெற்றிக்காக இருக்கப் போகிறதா என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டின் நன்மைக்காக போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் முதலமைச்சர் கூறியதுபோல தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்நாடு வெற்றிப்பெறும்." என தெரிவித்தார்.

    Next Story
    ×