

விசிகவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.பனையூர் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் இன்று திமுகவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். இச்சூழலில் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் எனக்கூறி வந்து இணைந்துள்ளீர்கள். நீங்கள் முன்பு இருந்த இயக்கமாக விசிகவை விமர்சித்து பேசக்கூடாது, அப்படி செய்யவேண்டிய தேவையும் இல்லை.
இன்று தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சிக்குறித்து சொல்ல வேண்டிய தேவையில்லை. ஏற்கனவே சொல்லியிருந்தோம் 6 மாதங்களுக்கு இந்த அரசை விமர்சிக்கக்கூடாது என்று. ஆனால் அதற்கான தேவை வந்துவிடுகிறது, வந்துவிட்டது.
3 மாதங்களுக்காகவது தாங்குமா என்ற நிலையில்தான் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில்தான் நீங்கள் கட்சியில் வந்து இணைந்துள்ளீர்கள்.” என தெரிவித்தார்.