தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,600-ஐ தாண்டியது

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1072 பேருக்கு கொரோனா.கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 1,487 குணமடைந்துள்ளனர்.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தினசரி கொரோனா பாதிப்பு நிலவரப்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,487- பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 1072 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோவையில் 145 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com