காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பா.ஜ.க.-விற்கு அருகதை இல்லை- ஜோதிமணி எம்.பி

எங்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழித்துப் பழக்கமில்லை.
காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பா.ஜ.க.-விற்கு  அருகதை இல்லை- ஜோதிமணி எம்.பி
Published on

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழித்துவிட்டு அவர்கள் இடத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதை பாஜக நினைவில் கொள்ளட்டும்.

அசாம் கண பரிசத், SAD,PDP, JD (S),JD( U), Siva sena, HVM, அதிமுக உட்பட பாஜக அழித்தொழித்த கட்சிகளின் பட்டியல் வெகு நீளம்.

பாஜக தமிழ்நாட்டை அழிக்கத் துடிப்பதால் தான் அதைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழித்துப் பழக்கமில்லை.

இவ்வாறு அவுர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com