அந்த நல்ல தீர்ப்பு நாளை வரும்..!- ஆர்.பி.உதயகுமார்

ஒரு சாமானியராக மக்களோடு மக்களாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.
அந்த நல்ல தீர்ப்பு நாளை வரும்..!- ஆர்.பி.உதயகுமார்
Published on

தமிழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் 4 முனைப்போட்டி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

வாக்கு முடிவ குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலே அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கிற அந்த நல்ல தீர்ப்பு நாளை வர இருக்கிறது.

களத்திலே நின்ற முதலமைச்சர் வேட்பாளர்களிலே முதன்மையானவராக, எல்லோரும் விரும்பியவராக, எல்லோரும் வரவேற்கக்கூடியவராக, ஒரு சாமானியராக மக்களோடு மக்களாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com