டாஸ்மாக் கடை மூடல்: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது- ஐகோர்ட்

மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம். கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
டாஸ்மாக் கடை மூடல்: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது- ஐகோர்ட்
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

பொதுநலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது.

மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம். இது சம்பந்தமான முறையீட்டை பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம்.

இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com