

தமிழக முதல்வராக மே 10 விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு 2வது தேசிய கீதம் பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்தார்.
ஆனால் இன்று அமைச்சரவை விரிவாகம் செய்யப்பட்டு நடைபெற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவிலும் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.