விஜயதாரணி விலகியது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார்.விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சி கொண்டாடினர்.
விஜயதாரணி விலகியது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள்
Published on

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார்.

சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.

இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com