தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

நாடு முழுக்க தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து.
தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
Published on

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கும் பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதில், "மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்!," என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com