தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது - விஜய்க்கு திருமாவளவன் பதில்

மூன்றாவும் கடைசியுமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது - விஜய்க்கு திருமாவளவன் பதில்
Published on

பதவியேற்பு நிகழ்ச்சியில் முந்தைய அரசை சாடிய முதல்வர் விஜய், 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' என்று பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான் நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, இரண்டாவதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூன்றாவும் கடைசியுமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின்பு தேசிய கீதம் இசைப்பது மரபாக இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டதும் வந்தே மாதரம் புகுத்தப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் விஜய் பேச்சு மற்றும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் முதலில் இசைக்கப்படும். அரசு விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாட மத்திய அரசு தெரிவித்து இருந்தாலும் தமிழக அரசு மறுத்துள்ளது.

வந்தே மாதரம் பாடல் மதம் சார்ந்த கருத்தை கொண்டிருப்பதாக ஒரு சர்ச்சை இருக்கிறது. பாடல் விவகாரத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவா, ஆளுநரின் விருப்பமா எனத்தெரியவில்லை.

முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி இதற்குரிய விளக்கத்தை விஜய் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதுபோல தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது. தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும். அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP)ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியாக இருக்கும். 15வது நிதிக் குழு நிர்ணயித்த வரம்புகளுக்கு உள்ளேயே தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது. முழு அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும். விஜய்க்கு நெருக்கடி தர விரும்பவில்லை. பெரும்பான்மை கோரும் போது தவெகவை ஆதரிப்போம்” என்றார்

X

Maalai Malar
www.maalaimalar.com