தமிழகத்தில் இன்று புதிதாக 2,223 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்புகொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 2,223- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,402- ஆகும். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33,312 ஆகும். தலைநகர் சென்னையில் இன்று 575- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com