உலகளவில் தமிழ்நாட்டை தனி பிராண்டாக மாற்ற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்துள்ளோம்.
உலகளவில் தமிழ்நாட்டை தனி பிராண்டாக மாற்ற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராமநாதபுரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்த பெருமையுடன் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

சாதி, மத வேற்றுமைகளை கடந்த மக்கள் வாழும் மண் ராமநாதபுரம்.

கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் புதிய உயரத்தை அடைந்துள்ளது.

இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்துள்ளோம்.

இந்த வளர்ச்சி போதாது. உலகளவில் தமிழ்நாட்டை தனி பிராண்டாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டை உலகளவில் தனி பிராண்டாக மாற்ற திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

ராமநாதபுரத்தில் இந்தமுறையும் 100 சதவீத வெற்றியை தருவீர்களா?

தனுஷ்கோடி சுற்றலாத்தளம் மேம்பாடு, ராமநாதபுரத்தில் அறிவுசார் மையம், ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் செய்த சாதனைகளை சொல்வதைப்போல பழனிசாமியால் சொல்ல முடியுமா?

ரூ.8,000 கூப்பன் மூலம் உங்களுக்கு தேவையான பொருளை பிடித்த கடையில் வாங்கிக்கொள்ளலாம்.

விடியல் பயண பேருந்துகளை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதிகரிக்கப்போகிறோம்.

எடப்பாடி பழனிசாமி பெண்களை கண்ணியம் இல்லாமல் பேசுகிறார்.

தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சிக்கிறது. பாஜகவின் அட்டூழியங்களை எதிர்த்து இபிஎஸ் பேசுவாரா? பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவேன் என பாஜக தேர்தல் அறிக்கை நமது பன்முகத்திற்கு வெளியிட்டுள்ள சவால்.

சாக்கடைக்கு சமமாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து வரும் வார்த்தைகளுக்கு ஏப்ரல் 23ம் தேதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

மோடியையும், அமித்ஷாவையும் எதிர்த்து பேச சொன்னால் பயத்திலேயே Switch Off ஆகிவிடுவார் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ்-ன் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு; பாஜகவின் அட்டூழியங்களை எதிர்த்து பேசுவாரா இபிஎஸ்?

பழனிசாமி தமிழ்நாட்டை ஆண்ட நான்கு ஆண்டுகால ஆட்சிக்காலம் இருண்டக்காலம்.

நமது திறமையான நிர்வாகத்தால் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com