தமிழக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்- புதிய அமைச்சர்கள் யார் யார்?

த.வெ.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
தமிழக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்-  புதிய அமைச்சர்கள் யார் யார்?
Published on

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆனந்த் , ஆதவ் அர்ஜூனா , செங்கோட்டையன் உட்பட 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். அமைச்சர்களுக்கான இலாகா கடந்த 17-ந்தேதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில்இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பதவியேற்ற அமைச்சர்கள் சிலரிடம் 2அல்லது 3க்கும் மேற்பட்ட துறைகள் கைவசம் உள்ளன.

இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது.

உயர்க்கல்வி மற்றும் சுற்றுலாத்துறை காங்கிரஸ் சார்பில் இடம்பெற உள்ளோருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தவிர்த்து மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.

த.வெ.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com