கவர்னருக்கு எதிராக பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார்

ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன்உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.
கவர்னருக்கு எதிராக பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார்
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன், எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.

எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com