

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, விழுப்புரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி காலை 10.10 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு முன்பதிவில்லா ரெயில் இயக்கப்படுகிறது. அதே தேதியில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு விழுப்புரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.