DMK| தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? மத்திய மந்திரி எல்.முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு பதில்

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறது.
DMK| தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? மத்திய மந்திரி எல்.முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு பதில்
Published on

சபாநாயகர் அப்பாவு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரில் வணிக ரீதியிலான சிலிண்டர்கள் கிடைக்காததால், எத்தனையோ ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய மந்திரி எல்.முருகன் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது சரியல்ல.

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறது. அறிவுள்ளவர்கள் உள்ள மாநிலம். இந்த மக்கள் உடனடியாக ஏன் எதற்கு? என்று கேள்விகள் கேட்பதால், அவர்களால் இங்கு கொள்ளை அடிக்க முடியாது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் மத்திய மந்திரி முதலில் மணிப்பூர் சென்று பார்க்க வேண்டும். அங்கு போலீஸ் வேனில் சென்ற பெண்ணுக்கு என்ன நிலை ஏற்பட்டது? என்பதை பார்த்துவிட்டு வந்து, அவர் தமிழ்நாட்டைப் பற்றி பேசட்டும் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com