

சென்னை எம்.ஆர்.சி. நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஏமாற்றம் ஏமாற்றம் எனக்கூறுகிறார்கள். தவெகவுக்கு ஆதரவு தான் என்பதை தெளிவுபடுத்தினோம்.
* அமைச்சரவையில் இடம் பெறுவோம் என நாங்கள் ஒருமுறை கூட கூறவில்லை. சிலர் திட்டமிட்டு இதே கருத்தை கூறி வருகின்றனர்.
* ஏமாந்து விட்டதாக சமூகவலைதளங்களில் சிலர் தொடர்ந்து திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்.
* பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு தரவில்லை.
* திமுக எதிர்ப்பு என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவு அளித்தோம்.
* புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.