

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பாமகவின் சட்டசபை குழு தலைவர் சவுமியா அன்புமணி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சர் விஜய் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
* என்னை இந்த நிலைக்கு உயர்த்திய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, வாக்களித்த மக்களுக்கு நன்றி.
* தமிழ்நாட்டில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு பிரகாசத்தை ஏற்படுத்தி உள்ளது.
* ஒரு அறையை சிறு ஒளி நிரப்பி விடுவதைப்போல் ஆளுநர் உரையில் இருந்த சமூக நீதி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு இருந்தது.
* மழை, வெயில் என எதுவும் பார்க்காமல் வேலை செய்பவர்கள் வேளாண் மக்கள்.
* பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதை செலவாக பார்க்காதீர்கள்.
* விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
* மகாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
* தமிழகத்தில் அன்றாடம் 2 விவசாயிகள் வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
* கடனை செலுத்த முடியாத விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.