ஆளுநர், குஷ்பு குறித்து சர்ச்சை பேச்சு- திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி நிரந்தரமாக நீக்கம்

திமுக கூட்டத்தில் ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் நடவடிக்கை.கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு.
ஆளுநர், குஷ்பு குறித்து சர்ச்சை பேச்சு- திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி நிரந்தரமாக நீக்கம்
Published on

திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக நீக்கப்பட்டு சமீபத்தில்தான் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com