மக்கள் ஐயாவை கைவிட மாட்டார்கள்... நான் ராமதாசின் பிள்ளை - சீமான் புகழாரம்

மொத்த கட்சி கூட்டணியை ஒத்த கட்சி மோதி வெல்லும். மொத்தத்தில் வீரம் வேண்டும் சுடலை மாடா என்று சீமான் கூறினார்.
மக்கள் ஐயாவை கைவிட மாட்டார்கள்... நான் ராமதாசின் பிள்ளை -  சீமான் புகழாரம்
Published on

வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சோனியாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

* கனிமொழிக்கே சீட் கொடுக்காதவர்கள் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்படி கொடுப்பார்கள்..?

* ஒரு சீட்டுக்காக சரண் அடையாமல் மக்களை எச்சரிக்கும் வேல்முருகனை பாராட்டலாம்.

* கட்சிகளால் கைவிடப்பட்டதாக சொல்லாதீர்கள். எங்கள் ஐயாவை மக்கள் கைவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்கள் அவரை கைவிட மாட்டார்கள்.

* நான் ராமதாஸின் பிள்ளை.. நான் இன்று பேசுவது அவர் கற்றுக்கொடுத்ததுதான்.

* நான் ராமதாசின் பிள்ளை. நான் இன்று பேசுவது அவர் கற்றுக்கொடுத்ததுதான். அவர் இல்லாமலா எனக்கு இந்த எனக்கு உணர்வு வந்துள்ளது. இந்த போராட்ட குணம் வந்துள்ளது.

* 85 வயதில் தமிழைத்தேடி என்று ஒருவன் நடப்பானா? ஒரு தலைவன் இருக்கிறானா?

* சமூக நீதி என்று பேசுபவர்கள் அவரைத்தாண்டி பேச ஆள் இருக்கிறதா?

* நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இன்னும் பேசும் ஒருவர் என் ஐயா தான்.

* ஐயாவின் கனவை பிள்ளைகள் நாங்கள் நிறைவேற்றுவோம்.

* இந்த வயதிலும் நாட்டிற்கு ஏதாவது செய்வோம் என்று இயங்கிக்கொண்டு இருக்கிறாரே ஐயா ராமதாசை பாராட்டுங்கள்.

* மொத்த கட்சி கூட்டணியை ஒத்த கட்சி மோதி வெல்லும். மொத்தத்தில் வீரம் வேண்டும் சுடலை மாடா.

* பேரிடர் காலத்திற்கு தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com