தமிழகத்தில் 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் - சீமான்

டாஸ்மாக் மதுவை குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைப்பது இந்த அரசு.
தமிழகத்தில் 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் - சீமான்
Published on

ராணிப்பேட்டை:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருத்தணியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். நேற்று இரவு அவர் ராணிப்பேட்டையில் உள்ள முத்துக்கடை பஸ் நிலையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

தமிழகம் இன்று வரை அரை அங்குல வளர்ச்சியை கூட பெறவில்லை. மகளிருக்கு முதலில் 1000 ரூபாய், அடுத்து 2 ஆயிரம் ஓட்டுக்கு முன்பு 500 ரூபாய், இப்போது 1000 ரூபாய், மது விற்பனையை 45 ஆயிரம் கோடியிலிருந்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்துவார்கள் இதுவா தமிழகத்தின் வளர்ச்சி?

நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஊழல் லஞ்சத்தை ஒரே நிமிடத்தில் ஒழிப்போம். பிள்ளைகளுக்கு ஆராய்ச்சி கல்வி வரை தரமான கல்வியை கொடுப்போம்.

உலக தரத்தில் மருத்துவத்தை உயர்த்தி அனைவருக்கும் ஒரே சமமாக வழங்குவேன். தூய குடிநீரை அனைவருக்கும் கொடுப்பேன் பிற மாநிலங்களில் மண் அள்ள தடை உள்ளபோது எனது மாநிலத்தில் மட்டும் மண்ணை கொள்ளையடிப்பது ஏன்?

கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் அரசு, நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழக்கும் வீரருக்கு வழங்குவதில்லை. நெல் மணிகளை சேமித்து வைக்க குடோன்கள் இல்லாமல் மழையில் முளைத்து அவை வீணாகின்றன. ஆனால் டாஸ்மாக் மதுவை குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைப்பது இந்த அரசு.

சர்க்கரை ஆலைகளில் உருவாக வேண்டிய சர்க்கரை இன்று ஒவ்வொருவர் உடலிலும் உருவாகிறது. அப்போதெல்லாம் பணக்கார நோயாக இருந்த சர்க்கரை நோய் இன்று சகஜமாகி விட்டது.

வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாயை வரவு வைக்க 6 ஆயிரத்து 800 கோடி ரூபாயை செலவு செய்கிறார்கள். ஆனால் 500 கோடி ரூபாய் இருந்தால் இந்த எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் படித்தால் மட்டும் தான் தமிழகத்தில் வேலையில் முன்னுரிமை. அரசு பள்ளி, கல்லூரியில் படித்தவர்களுக்கே அரசு வேலை.

தமிழகத்தில் 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர். பயந்தவன் தான் கூட்டத்தை நம்புவான் வீரன் தனித்து தான் நிற்பான்.

எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பியே அனைத்திலும் புதியதை தேடும் நீங்கள். அரசை மட்டும் பழையதையே தேர்வு செய்கிறீர்கள். 4 முறை தோற்றும் 5-வது முறையாக தனித்து நிற்கிறோம். எங்களை பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் உள்ள நம்பிக்கையில் நாங்கள் நிற்கிறோம். மொத்த கட்சி கூட்டணியையும் எங்கள் கட்சி வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com