கனமழை எதிரொலி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Published on

காஞ்சிபுரம்:

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com