என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது - வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்
- வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அவை முன்னவர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடந்தது.
நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ராமாயணத்திலே பெண்ணை தூக்கிச் சென்றனர். எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள் என்று கூறினார்.
எனக்கு அச்சம் உள்ளது என வானதி கூறியவுடன் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.






