

தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைந்துள்ளது. இந்த ஆட்சியில், கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக நேற்றைய சட்டசபை நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியிருந்தார். அப்போது, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், முந்தைய அரசுகளின் முக்கிய திட்டங்கள் தொடரும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும், மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.