விஜயை விமர்சித்து TVK-வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் DMK-வில் இணைந்தார்
சென்னை :
சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பில் மட்டும் இல்லாது அரசியல் பிரமுகராக இருப்பவர் ரஞ்சனா நாஞ்சியார். இவர் கடந்த 2023ம் ஆண்டு சென்னை போரூர் கெருகம்பாக்கத்தில் பஸ்சில் தொங்கிய படியே சென்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டதுன், பஸ் டிரைவர்- கண்டக்டரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி விடுதலையானார் நடிகை ரஞ்சனா நாச்சியார். இதன்பின்னே இவர் பிரபலமானார்.
இதற்கிடையே ரஞ்சனா நாச்சியார் முதலில் பா.ஜ.க.வின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்தார். அதன்பின் மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிட வெறுப்பு, தமிழகம் புறக்கணிப்பு ஆகிய காரணங்களால் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக கூறி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.
த.வெ.க.வில் இணைந்து சில நாட்கள் பணியாற்றிய நிலையில், விஜய்- சங்கீதா விவாகரத்து தொடர்பாக விஜய் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? திருமணத்துக்கு பின்பு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வராதா? என கூறியிருந்தார். இதன்பின் மௌனமாக இருந்த ரஞ்சனா நாச்சியார் இன்று தி.மு.க. வில் இணைந்துள்ளார்.
த.வெ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

