

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிறகு திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஸ்டாலின் சார் 40 ஆண்டு கால நண்பர், எங்களின் நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனக்கும் விஜய்க்கும் Generation Gap.
* நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று ஏற்கெனவே கிளியரா சொல்லி விட்டேன்
* எனக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் சுமார் 25 வயது வித்தியாசம் உள்ளது. சிறு வயது முதலே அவரை பார்த்து வருகிறேன்.
* நடிகர் சங்கம், கமல் உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜயை சந்தித்துள்ளனர். சம்பிரதாயத்திற்காக போய் பார்ப்பது எனக்கு பிடிக்காது.
* விஜய்க்கு 2 ஆண்டுகள் நேரம் கொடுக்க வேண்டும்.
* மக்களின் எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.