முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை, பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா

தேமுதிக தொண்டர்கள், பொது மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை, பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா
Published on

மறைந்த விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

இதைதொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சிறந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் இடம் ஒதுக்கீடு கொடுத்து, உதவி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பு வழங்கிய அனைத்து காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தொண்டர்கள், பொது மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் எந்த தலைவருக்கும் கிடைத்திடாத அன்பு விஜயகாந்திற்கு கிடைத்துள்ளது. 2 நாட்களில் 15 லட்சம் தொண்டர்கள், பொது மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ராகுல் காந்தி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com