த.வெ.க.வில் இணைந்ததற்கு எதிர்ப்பு: மரகதம் குமரவேலுக்கு எதிராக மதுராந்தகம் முழுவதும் சுவரொட்டி

மரகதம் குமரவேலுக்கு எதிராக தொகுதிக்குள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
த.வெ.க.வில் இணைந்ததற்கு எதிர்ப்பு: மரகதம் குமரவேலுக்கு எதிராக மதுராந்தகம் முழுவதும் சுவரொட்டி
Published on

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மரகதம் குமரவேல் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றார். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த மரகதம் குமரவேல் கடந்த 25-ந் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தார்.

அவரது இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு இடங்களில் மரகதம் குமரவேலின் உருப்படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மரகதம் குமரவேலுக்கு எதிராக மதுராந்தகம் தொகுதி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. அதில்,"நன்றி மறந்தவர், துரோகம் செய்தவர்" என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்று உள்ளன. மரகதம் குமரவேலுக்கு எதிராக தொகுதிக்குள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com