முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது வழக்கு

முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனிதா ராதாகிருஷ்ணன்- விஜய்
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசினார்.

அப்போது, நான் ஒரு வியாபாரி. என் கடைக்கு வருபவர் பணம் வைத்துக் கொண்டு பொருள் வாங்க வருகிறாரா அல்லது கடன் வாங்க வருகிறாரா? என்று அவர் முகத்தை வைத்து கண்டுபிடித்து விடுவேன்.

அதேபோல் முதலமைச்சர் விஜய்யின் முகத்தை பார்க்கும் போது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த என்னை இப்படி அரசியலில் மாட்டி விட்டீர்களே என முகம் தெரிவதாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com