பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - எந்தெந்த பாடத்தில் எவ்வளவு மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - எந்தெந்த பாடத்தில் எவ்வளவு மாணவர்கள் தேர்ச்சி
Published on

தமிழ்நாட்டில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்ச்சியில் முதல் 5 இடத்தை பிடித்த மாவட்டங்கள்:

ஈரோடு 98.87%, சிவகங்கை 98.05%, கன்னியாகுமரி 97.63%, திருநெல்வேலி 97.54%, திருச்சி 97.50%

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 7.83 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆங்கில மொழி பாடத்தில் 7.81 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

கணித பாடத்தில் 4.41 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

இயற்பியல் பாடத்தில் 5.28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

வேதியியல் பாடத்தில் 5.28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

உயிரியல் பாடத்தில் 2.65 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

கணக்குப்பதிவியல் பாடத்தில் 2.26 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

வணிகவியல் பாடத்தில் 5.28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

பொருளாதாரம் பாடத்தில் 5.28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

வரலாறு பாடத்தில் 62,270 மாணவர்கள் தேர்ச்சி

புவியியல் பாடத்தில் 10,099 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com