பெட்ரோல், டீசல் விலை உயர்வு - முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலையேற்றம் குறைவுதான் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மேற்காசியப் போர்ச் சூழல் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன.

இந்நிலையில் இதற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.

இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது.

இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com