

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என எப்போதுமே கூறி வருகிறோம்.
சட்டமன்ற தேர்தல் தோல்வி பற்றி ஆராய்ந்து கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பதவிக்காக தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்கவில்லை, திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் ஆதரவு அளித்தோம்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கொடுத்த மனுக்களை சரிபார்த்து கொடுத்ததே சி.வி.சண்முகன் தான்.
அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. எங்கள் கருத்து தான் சி.வி.சண்முகத்தின் கருத்து.
அனைத்து முடிவுகளும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து தான் எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.