அதிகாரிகள், ஊழியர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக அலுவலகம் வர வேண்டும்- புதிய உத்தரவு

பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் தாமதமாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அலுவலக நேரத்தில் பணியில் இல்லாமல் தினமும் காலதாமதமாக வருவதால் பணிகள் பாதிக்கப்படுகிறது.
அதிகாரிகள், ஊழியர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக அலுவலகம் வர வேண்டும்- புதிய உத்தரவு
Published on

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அவர் தினமும் காலை 9.30 மணிக்கு முன்னதாக தலைமை செயலகத்திற்கு வந்து விடுகிறார். முதலமைச்சரே தனது கடமையை அலுவல் நேரத்திற்கு முன்பாகவே வந்து செய்ய தொடங்குகிறார்.

இதனால் உயர் அதிகாரிகள், தலைமை செயலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை காலை 10 மணிக்கு முன்னதாக வரவேண்டும் என்று வாய்மொழி உத்தரவினை பிறப்பித்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளும், பணியாளர்களும் 10 மணிக்கு முன்னதாக அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் தாமதமாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அலுவலக நேரத்தில் பணியில் இல்லாமல் தினமும் காலதாமதமாக வருவதால் பணிகள் பாதிக்கப்படுகிறது.

எனவே பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் பத்து மணிக்கு முன்னதாக அலுவலகத்துக்கு வர வேண்டும், ரெக்கார்டு கிளார்க், அலுவலக உதவியாளர்கள் 9.30 மணிக்குள் வரவேண்டும் என்று சார்பு செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com