பழனிசாமி என்னை வாழ்த்தியதை உலக அதிசயமாக பார்க்கிறேன்- ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. பிரமாண்ட வெற்றி பெறும்.
பழனிசாமி என்னை வாழ்த்தியதை உலக அதிசயமாக பார்க்கிறேன்- ஓ.பன்னீர்செல்வம்
Published on

தேனி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்கிறார். இதற்கான பொதுக்கூட்டம் ஆண்டிபட்டி க.விலக்கு சாலையில் உள்ள பிராதுகாரன் பட்டியில் நடக்கிறது. இதையடுத்து அங்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை முன்னாள் முதலமைச்சரும், போடி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஆண்டிபட்டி பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி என்னை எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியுள்ளார். இதுகுறித்து நான் கேட்ட போது உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக பார்க்க தோன்றியது. தேனி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பது பழைய வரலாறு. கோட்டையில் ஓட்டை விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. பிரமாண்ட வெற்றி பெறும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி மலரும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com