அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் பயன் கிடைக்காது- ஆர்.எஸ்.பாரதி

பெண்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார்.
அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் பயன் கிடைக்காது-  ஆர்.எஸ்.பாரதி
Published on

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொய் மட்டுமே பேசி வருகிறார். இந்தியாவிலேயே மோடியை எதிர்த்து மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் தான்.

அனைவருக்கும் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் விளங்கி கொண்டிருக்கிறார். பெண்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

அமித்ஷா தமிழகம் வருவதால் பயப்படுவதாக சொல்கின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார். ஒன்றும் செய்யமுடியவில்லை.

அமித்ஷா வந்து என்ன செய்யப்போகிறார்? கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்ததை போன்று வருகிற சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். அதற்கான மக்கள் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com