

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிறந்தநாள் அன்று புதிய கட்சியை அண்ணாமலை தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
* அண்ணாமலை கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
* புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை யாரிடமும் பேசவில்லை.
* எனக்கும், அண்ணாமலைக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
* கடந்த திமுக அரசுக்கும் தற்போதைய தவெக அரசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
* தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்கிறது.
* கரூரில் பாட்டிலுக்கு ரூ.10 என முதலமைச்சர் பாடியிருந்தார். ஆனால்அவரது ஆட்சியிலும் பாட்டிலுக்கு ரூ.10 வசூல்.
* முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து நடந்துக்கொள்வதாக தெரியவில்லை.
* சிறுபான்மை அரசா, சிறுபான்மையினருக்கான அரசா என்பதை முதலமைச்சர் விஜய் விளக்க வேண்டும்.
* கொச்சையான வார்த்தைப் பயன்பாட்டை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்றார்.