MK Stalin | சாதனை வாக்குப்பதிவு... குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
MK Stalin | சாதனை வாக்குப்பதிவு... குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 84.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், "ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!

எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.

84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.

"ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

தமிழ்நாடு வாக்களித்துவிட்டது,

மே 4 தமிழ்நாடு வெல்லும்!," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com