ரூ.50 கோடிக்கு த.வெ.க எம்.எல்.ஏ.-க்களை வாங்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்..!- அமைச்சர் நிர்மல் குமார்

மு.க.ஸ்டாலின் செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
Minister Nirmal Kumar
Published on

சென்னை பெருங்குடியில் மாணவர் விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றபின் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.50 கோடிக்கு எம்எல்ஏக்களையும் ரூ.2000 கொடுத்து மக்களின் வாக்குகளையும் வாங்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.

மக்கள் அளித்த தீர்ப்பை பணத்தை கொண்டு மாற்ற மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.

மு.க.ஸ்டாலின் செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தவெக எம்எல்ஏவையும் மிரட்டி தனிப்பட்ட முறையில் சந்தித்து தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

30 நாட்களின் ஆட்சி கவிழும் என எந்த நம்பிக்கையில் மு.க.ஸ்டாலின் பேசினார். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சினை கவிழ்க்கலாம் என்ற நம்பிக்கையில் பேசியிருக்கிறார்.

திமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் ஸ்டாலின் அக்கட்சியை விட்டு விலக வேண்டும்.

அதிமுகவை காப்பாற்ற இபிஎஸ் அந்த கட்சியில் இருந்து விலக வேண்டும்.

மக்களவை தவிர நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, நேர்மையாக இருக்கும் நாங்கள் எதற்கும் யாருக்கும் பயப்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com