இயக்குநர் மணிரத்னத்திற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளை மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன்.
இயக்குநர் மணிரத்னத்திற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Published on

இயக்குநர் மணிரத்னம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!

மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளை மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com