

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து காலம் பதில் சொல்லும்.
* சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வது அவர்களுக்கு இருக்கிற ஜனநாயக உரிமை.
* ஆட்சியை பிடிக்க திமுக தயவை நாடியது யார் என அனைவருக்கும் தெரியும்.
* குதிரை பேரம் நடத்தவில்லை. திமுக ஆதரவுடன் முதல்வர் ஆவேன் என்று சொன்னவர் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
* அதிமுகவில் இருந்து தாம் யாரையும் தவெகவில் இணைக்கவில்லை.
* அதிமுகவில் ஜனநாயகம் என்பதே இல்லை.
* எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தைக்கூட வைக்க அனுமதிக்காதவர் இபிஎஸ்.
* இன்றும் எனது பாக்கெட்டில் ஜெயலலிதா படம் உள்ளதால் தவெகவில் ஜனநாயகம் உள்ளது.
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிற்கும் எப்போதும் என் மீது தான் குற்றம் சொல்கிறார்.
* ராஜினாமா செய்வதும் கட்சியில் இணைவதும் அவரவர் விருப்பம்.
* நானே ராஜினாமா செய்துவிட்டு தான் தவெகவில் இணைந்தேன்.
* குற்றங்கள் நடைபெறும்போது உடனுக்குடன் அதிரடியாக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
* முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகளை பார்த்து பிடித்து தவெகவில் இணைகிறார்கள்.
* புதிய ஆட்சி குறித்து 6 மாதம் எதையும் பேச மாட்டோம் என்று கூறினார்களா? இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.