DMK| பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் நிச்சயம் பதில் சொல்லும்- அமைச்சர் சேகர்பாபு

நயவஞ்சகத்தோடு சுற்றித் திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
DMK| பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் நிச்சயம் பதில் சொல்லும்- அமைச்சர் சேகர்பாபு
Published on

அயனாவரம்:

சென்னை அயனாவரத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் போட்டியிடுவதாக வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நயவஞ்சகத்தோடு சுற்றித் திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். மேலும் அவர் பேசுகையில், எதை வேண்டுமென்றாலும் பேசாலாம் என்ற நோக்கத்தோடு பேசுகின்றனர்.

பணம் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு பேசுபவருக்கு பாடம் புகட்டப்படும். வார்த்தை அம்புகள் எதிரில் இருந்து எப்படி வருகிறதோ அதே போல திருப்பி கொடுக்கப்படும். பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் நிச்சயம் பதில் சொல்லும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com